உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் 6வது சிறுத்தை சிக்கியது; இன்னும் எத்தனை இருக்கோ.. பக்தர்கள் அச்சம்

திருப்பதியில் 6வது சிறுத்தை சிக்கியது; இன்னும் எத்தனை இருக்கோ.. பக்தர்கள் அச்சம்

திருப்பதி; திருப்பதி, திருமலை அலிபிரி நடைபாதையில் உள்ள கூண்டில் மற்றொரு சிறுத்தை சிக்கியது.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய, திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்ற போது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி இறந்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இதில் 5வது சிறுத்தை சிக்கிய நிலையில் இன்று கூண்டில் 6வது சிறுத்தை சிக்கியது. இதனால், இன்னும் எத்தனை உள்ளதோ என்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அச்சத்தில் செல்கின்றனர்.  சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !