மூலவெற்றி விநாயகர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
ADDED :760 days ago
புதுச்சேரி : சாமிபிள்ளைத்தோட்டம் மூலவெற்றி விநாயகர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது. புதுச்சேரி, சாமிபிள்ளைத் தோட்டம், மூல வெற்றி விநாயகர் கோவிலில் பரிகார வராகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நேற்று வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.