/
கோயில்கள் செய்திகள் / மன நிம்மதி தரும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
மன நிம்மதி தரும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :814 days ago
திருச்சி : குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.
தமிழகத்தில் தென் திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவியார்களுடன் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம் செய்தனர்.