ஓம் சரவண பவ.. இன்று புரட்டாசி செவ்வாய்; கந்தனை வணங்கினால் கவலைகள் தீரும்
ADDED :756 days ago
செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. சிவனின் மறுவடிவே முருகன். அம்பிகையின் அம்சமே முருகனின் கரத்தில் இருக்கும் வேல். முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும், கடன்கள் தீரும். இன்று கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம்.