/
கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் சக்கர ஸ்நானம், புஷ்கரணியில் தீர்த்தவாரி: முதல் பிரம்மோற்சவம் நிறைவு
திருப்பதியில் சக்கர ஸ்நானம், புஷ்கரணியில் தீர்த்தவாரி: முதல் பிரம்மோற்சவம் நிறைவு
ADDED :753 days ago
திருப்பதி: திருப்பதி திருமலை பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று காலை புஷ்கரணி எனப்படும் கோவில் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று (26ம் தேதி) புஷ்கரணி எனப்படும் கோவில் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான முதல் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.