பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :753 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திருவோணம் ஏகாதசி பூஜையை முன்னிட்டு நேற்று காலை கலசபூஜையுடன் துவங்கியது. மூலவர் வரதராஜப் பெருமாள், திருப்பதி அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்சவருக்கு நவகலச ஸ்நப திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலையில் வரதராஜப் பெருமாள் கருட சேவையில் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா சென்றார். பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் திருவோணம் ஏகாதசி பூஜை நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.