சுட்டெரிக்கும் வெயில்: தாகம் தணித்த ராமேஸ்வரம் கோயில் யானை
ADDED :751 days ago
ராமேஸ்வரம்: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி தாகம் தணித்தது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள யானை ராமலட்சுமி, கோயில் முக்கிய விழா நாளில் சுவாமி, அம்மனுடன் வீதி உலா வரும். இதனை வீதியில் கூடி நிற்கும் பக்தர்கள், சிறுவர்கள் யானையிடம் ஆசி பெற்று மகிழ்வார்கள். தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு நாள்களாக ராமேஸ்வரம் பகுதியில் சுட்டெரித்த வெயிலுக்கு யானை ராமலட்சுமி சோர்வடையாமல் இருக்க நேற்று கோயில் வளாகத்தில் உள்ள குழாயை பாகன் ராமு திறந்ததும், பீய்ச்சி அடித்த குடிநீரை லாவகமாக பருகி தாகம் தணித்தது. இதனைக் கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.