புரட்டாசி செவ்வாய்; செம்மலர் அலங்காரத்தில் கல்யாண சுப்பிரமணியர்
ADDED :1086 days ago
கோவை ; கோவை ஆர். எஸ். புரம் வின்சென்ட் காலனி உழவர் சந்தை அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.