திருப்பரங்குன்றம் கோயிலில் நன்கொடை செலுத்த கியூ ஆர் கோடு வசதி
ADDED :757 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொதுமக்கள், பக்தர்கள் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை கோயில் அலுவலகத்தில் நேரடியாகவும், இணையதள வசதிகள் மூலமாகவும் கோயில் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். தற்பொது கூடுதல் வசதியாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு செலுத்த நினைக்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை அலைபேசி மூலமாக செலுத்த ஏதுவாக கியூ ஆர் கோடு வசதிகள் நேற்று முதல் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது என துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.