உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சதுர்த்தசி; அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி சதுர்த்தசி; அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தால் தடைகளெல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. இன்று புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜ பெருமானுக்கு  மூல்லிகைபொடி, பால், சந்தனம் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !