விநாயகருக்கு படைக்கப்பட்ட ஒரு லட்டு ரூ1.20 கோடிக்கு ஏலம் போனது
ADDED :754 days ago
பண்டலகுடா: விநாயகர் சதுர்த்திவிழா ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வாறு, தெலுங்கானா மாநிலம் பண்டலகுடாவில் விநாயகர் சதுர்த்திவிழா சிலை வைத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் விநாயகருடன் லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த லட்டை ஏலம் எடுக்க போட்ட போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு லட்டுரூ1.20 கோடிக்கு ஏலம் போனது. வில்லாவில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த லட்டுவை ஏலம் எடுத்துள்ளனர். சிறப்பு வழிபாடுகளுக்கு பின் இந்த லட்டு அப்பகுதி மக்களிடம் வழங்கப்பட்டது.