/
கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜப் பெருமாளை தரிசிக்க பால், தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை வந்த பக்தர்கள்
சவுந்தரராஜப் பெருமாளை தரிசிக்க பால், தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை வந்த பக்தர்கள்
ADDED :753 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், பக்த ஆஞ்ச நேயர், தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாத பெருமாள்,எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள், கெட்டியப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். காணப்பாடி முத்தம்மன், சீனிவாச பெருமாள் கோயில் புரட்டாசி சனிக்கிழமைக்காக தண்ணீர்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, வெல்லம்பட்டி, மறவபட்டி, பண்ணைப்பட்டி, கொல்லப்பட்டி,போஜனம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால், தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரையாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏற்பாட்டினை ஒக்கலிகர் குஞ்சி காப்பு கரவனவார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.