உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மஹா சுதர்சன யாகம்

உலக நன்மை வேண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மஹா சுதர்சன யாகம்

பல்லடம்: பல்லடம் அருகே, புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, உலக நன்மை கருதி மகா சுதர்சன யாகம் நடந்தது. பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, உலக நன்மை கருதியும், விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்படவும் மஹா ஸ்ரீசுதர்சன யாகம் நடந்தது. காலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை நடந்த இந்த சிறப்பு யாகத்தை தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, சிறப்பு அலங்காரத்துடன் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !