உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரவை முத்துநாயகி அம்மன் கோயில் விழா துவக்கம்

பரவை முத்துநாயகி அம்மன் கோயில் விழா துவக்கம்

வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்.,7 வரை நடக்கும் விழாவில் தினமும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலை சுற்றி அம்மன் திருவீதி உலா நடக்கும். விழாவின் முக்கிய நிகழ்வான அக்.,3 மாலை பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அக்னிசட்டி, கரகம் எடுத்தல், 4.,ல் அலகு குத்தி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.அக்.,5ல் கருப்பண சுவாமி கோயிலில் பொங்கல் வைத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். 7.,ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு நாடகம், பட்டிமன்றம், தெம்மாங்கு கலை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகப்பட்டிதாரர்கள், பரவை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !