அக்., 1 முதல் பழநி கோவிலில் மொபைல் போனுக்கு தடை
ADDED :816 days ago
பழநி: பழநி முருகன் கோவிலில் மூலவரை பக்தர்கள் சிலர் படம் பிடிப்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து, பழநி கோவிலுக்கு போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகள், மொபைல் போன் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை நாளை அக்., 1 முதல் அமலுக்கு வருவதால் அவற்றை பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். கொண்டு வந்தால் அத்தகைய சாதனங்களை மொபைல் போன் பாதுகாப்பு மையங்களில் வழங்க வேண்டும். இதற்கு கட்டணமாக ஒரு மொபைல் போனுக்கு 5 ரூபாய் பெறப்பட உள்ளது. இம்மையங்கள் படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ளன.