ராஜஸ்தான் சன்வாரியா சேத் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
ADDED :743 days ago
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கர் நகரில் உள்ள சன்வாரியா சேத் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி சித்தோர்கரில் உள்ள ஸ்ரீ சன்வாரியா சேத் கோயிலில் வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ராஜஸ்தானில் 7ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்களுக்கு இன்று(அக்.,02) பிரதமர் அடிக்கல் நாட்டினார். காந்திஜெயந்தியை முன்னிட்டு சித்தோர்கரில் மஹாத்மா காந்தி உருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.