மைசூரு அரண்மனையில் பீரங்கிக்கு சிறப்பு பூஜை
ADDED :745 days ago
மைசூரு: மைசூரு தசரா இந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை , 10 நாட்கள் நடக்க உள்ளது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து, இசையமைப்பாளர் ஹம்சலேகா தசராவை தொடங்கி வைக்க உள்ளார். தசராவின் கடைசி நாள் நடைபெறும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 14 யானைகள், மைசூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. அரண்மனை, பராம்பரிய கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. தசரா யானைகள், வெடி சத்தத்தை கேட்டு மிரளக்கூடாது என்பதற்காக, விரைவில் பயிற்சி துவங்கவுள்ளது. இதற்காக, பீரங்கிக்கு சிறப்பு பூஜைசெய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.