/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் தரிசனம்; சிற்பங்களை கண்டு வியப்பு
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் தரிசனம்; சிற்பங்களை கண்டு வியப்பு
ADDED :838 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் இன்று ஜெர்மனியில் இருந்து புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து இருபதிற்கும் மேற்பட்ட ஜெர்மனி நாட்டினர் ஸ்ரீஞான பிரசுனாம்பா சமேத காளஹஸ்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் மிகப் பழமை வாய்ந்ததாக இருப்பதாகவும் கோயிலுக்குள் வடிவமைக்கப் பட்ட சிற்ப கலைகள் தங்களை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தனர்.