திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :816 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவர் யோகநிலையில் அருள்பாலிக்கிறார். அஷ்டமி தினங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரமேஷ் குருக்கள், பிரேதாஷ் குருக்கள் காலை 12:00 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் யோகபைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.