திரு அருட்பிரகாச வள்ளலாரின் 201வது வருவிக்க உற்ற பெருவிழா
                              ADDED :756 days ago 
                            
                          
                           அவிநாசி: திருமுருக வள்ளலார் கோட்டத்தில் வள்ளலார் வருவிக்க உற்ற பெருவிழா நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள திருமுருக வள்ளலார் கோட்டத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரின் 201ஆவது வருவிக்க உற்ற பெருவிழா நடைபெற்றது. அதில் அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து சன்மார்க்க சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வருவிக்க உற்ற வள்ளலார் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருமுருக வள்ளலார் திருவுருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,தேரில் வைத்து திருவீதி உலா நடைபெற்றது.