கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :988 days ago
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.