/
கோயில்கள் செய்திகள் / நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா; பக்தர்கள் தரிசனம்
நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா; பக்தர்கள் தரிசனம்
ADDED :758 days ago
சிவகங்கை : இடைக்காட்டூரில் இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழாவில் சித்தர் சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் பதினெண் சித்தர்களில் முற்றிலும் வித்தியாசமானவர். இடைக்காடர் முனிவர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 600 ஆண்டுகள் 18 நாள் ஆகும். இவரின் ஜெயந்தி விழா மற்றும் கும்ப கலச சங்காபிஷேகம் சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சித்தர் சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.