உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபால்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கோபால்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கோபால்பட்டி, கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் ஆகாச சொர்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !