வடமதுரை பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :812 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், பக்த ஆஞ்ச நேயர், தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாத பெருமாள், எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள், கெட்டியப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், தூங்கணம்பட்டி வெங்கடேச பெருமாள், காணப்பாடி முத்தம்மன், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.