உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்.. ; புரட்டாசி சோமவாரம்.. சிவ சிவ என்றாலே நல்லது நடக்கும்!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்.. ; புரட்டாசி சோமவாரம்.. சிவ சிவ என்றாலே நல்லது நடக்கும்!

சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது 16 சோமவார விரதம்" எனப்படுகிறது. இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !