சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா
ADDED :809 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமத்தில் சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக உலக நன்மை, விவசாயம் செழிக்கவும் 108 விளக்கு பூஜை நடந்து. அப்பகுதி பெண்கள் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அக். 10 அன்று பக்தர்கள் பால்குட எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடைபெறும். அக். 11ல் முளைப்பாரி உற்ஸவம் நடக்கிறது.