நாடு முழுதும் களைகட்டியுள்ள நவராத்திரி பூஜை
ADDED :751 days ago
மஹாராஷ்டிரா; உலகின் அன்னையான அம்பிகையை வழிபடும் விரதமே நவராத்திரி விரதம், வடநாட்டில் இதனை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ருதுக்களில் வசந்த ருது (காலம்), சரத் ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதர்களுக்கு நோயை விளைவித்துத் துன்பத்தை உண்டாக்கும். எனவே, அவற்றிடமிருந்து விடுபடுவதற்காக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்க படுகிறது. நவராத்திரி பூஜை அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுதும் களைகட்டியுள்ளன. இதையொட்டி, மஹாராஷ்டிராவின் மும்பையில் துர்கா தேவியின் பிரமாண்ட சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் வழிபட்ட வருகின்றனர்.