உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம்

திருப்பதியில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம்

திருப்பதி; திருமலை நாதநீராஜன மண்டபத்தில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.

திருப்பதி, திருமலை நாதநீராஜன மண்டபத்தில் தேவஸ்தானம் ராமாயண பாராயணத்தை நடத்தி வருகிறது. சுந்தர காண்ட பாராயணத்தில் தொடங்கி, ஒவ்வொரு காண்டமும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அயோத்தியா காண்ட பாராயணம் நேற்று நடைபெற்றது. ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு அதற்கான விளக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.வி.வேத பல்கலைக்கழகம், தேவஸ்தான வேத அறிஞா்கள், அன்னமாச்சாா்யா திட்டம், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக அறிஞா்கள், தா்மகிரி பண்டிதா்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனா்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !