இரவு பகலாக நடக்கும் அயோத்தி ராமர் கோவில் பணி; கும்பாபிஷேகத்திற்கு ராம ஜென்ம பூமி தயார்!
லக்னோ : உ.பி.யில் ராமர் கோயில் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் நடைபெற்று வரும் புகைப்படங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில், ராமருக்கு ரூ. 1,800 கோடி செலவில் பிரமாண்ட கோவில் கட்டுவதற்காக 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இரவு பகலாக நடக்கும் கட்டுமான பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இது குறித்த புகைப்படங்களை , ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அப்புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கோயில் கருவறை கட்டும் பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் எனவும் 2024 ஜனவரிக்குள், கோயில் கட்டும் பணிகள் முழுதுமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் விழா ஜனவரி 22, 2024-ல் நடைபெற உள்ளது, விழாவில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.