உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: அக்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: அக்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு அக்.,15 அதிகாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழாத் துவங்குகிறது. தினமும் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, கொலு பூஜைகள் நடக்கிறது. 9ம் நாளான அக்., 23 இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடக்கிறது. 10ம் நாளான அக்.,24ல் விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அக்., 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதித்துள்ளது. கோயிலில் இரவு தங்கவோ, பொங்கல் வைக்கவோ, ஆடு, கோழி பலியிடவோ கூடாது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என வனத்துறை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலையத்துறையினர், ஏழூர் சாலியர் சமூகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !