பனி சூழ்ந்த பார்வதி குந்த்தில் பிரதமர் மோடி சிவ பூஜை செய்து வழிபாடு
உத்தரகண்ட் ; பித்தோராகர், உத்தரகாண்ட், பார்வதி குந்த்தில் பிரதமர் நரேந்திர மோடி சிவ பூஜை செய்தார்.
இன்று வியாழக்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் வந்தார். அங்குள்ள பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி அவர்கள். அதேபோல அங்குள்ள உள்ளூர் மக்களையும் சந்தித்து பேசவுள்ளார்.
இன்று அக்டோபர் 12ம் தேதி காலை 8:30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் வந்த பிரதமர், அங்கு பார்வதி குந்த் பகுதியில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். இப்பகுதி ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க பகுதியாகும். தொடர்ந்து காலை 9:30 மணியளவில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சி கிராமத்தை சென்றடையும் பிரதமர், அங்கு உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடினார். மேலும் உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளை சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார். ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆகியவற்றின் பணியாளர்களுடனும் உரையாடினார். மேலும் நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்கின்றார். சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, மதியம் 2:30 மணியளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர், அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்.