சதுரகிரி நவராத்திரி விழா; இரவு பூஜையில் பங்கேற்க அனுமதிக்க கோரி போராட்டம்
ADDED :770 days ago
சதுரகிரி : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும், இரவில் நவராத்திரி பூஜையில் பங்கேற்க வனத்துறை அனுமதிக்க கோரி ஏழூர் சாலியர் சமூகம் கோரிக்கை விடுத்து வந்தது. இதனை வனத்துறையினர் ஏற்க மறுத்தனர். இதனை அடுத்து இன்று காலை 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஏராளமான சாலியர் சமுதாய மக்கள்,ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் யுவராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.