உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 6200 அடி உயர ஜாகேஷ்வர் கோயிலில் பிரதமர் மோடி; அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ தரிசனம்

6200 அடி உயர ஜாகேஷ்வர் கோயிலில் பிரதமர் மோடி; அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ தரிசனம்

உத்தரகண்ட் ; பித்தோராகர், உத்தரகாண்ட், பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிவ பூஜை செய்தார். இன்று வியாழக்கிழமை பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் வந்தார். அங்குள்ள பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி அவர்கள். அதேபோல அங்குள்ள உள்ளூர் மக்களையும் சந்தித்தார்.

இன்று அக்டோபர் 12ம் தேதி காலை 8:30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் வந்த பிரதமர், அங்கு பார்வதி குளத்தில் சிவ  பூஜை மற்றும் தரிசனம் செய்தார். இப்பகுதி ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க பகுதியாகும். தொடர்ந்து காலை 9:30 மணியளவில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சி கிராமத்தை சென்றடையும் பிரதமர், அங்கு உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடினார். மேலும் உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளை சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார். ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) ஆகியவற்றின் பணியாளர்களுடனும் உரையாடினார்.

தொடர்ந்து பகல் 12 மணிக்கு அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் சென்ற பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்தார். சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, மதியம் 2:30 மணியளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர், அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் உள்ள புனித பார்வதி குண்டில் உள்ள தரிசனம் மற்றும் வழிபாடுகளால் பரவசம். இங்கிருந்து ஆதி கைலாசரின் தரிசனமும் மகிழும். இயற்கையின் மடியில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த இந்த இடத்தில் இருந்து தனது நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்தினார்.

ஆதி கைலாய தரிசனம்: உத்தரகாண்ட் பித்தோராகரின் புனித பார்வதி குளத்தில் தரிசனம் மற்றும் வழிபாடுகளில் நான் மூழ்கிவிட்டேன். இங்கிருந்து ஆதி கைலாச தரிசனத்தால் மனமும் மகிழ்ச்சி அடைகிறது. இயற்கையின் மடியில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த இந்த இடத்தில் இருந்து நாட்டின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிபட்டதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !