உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா கருப்புச்சாமி கோயிலில் 20 கிடாய்கள் வெட்டி அன்னதானம்

மகா கருப்புச்சாமி கோயிலில் 20 கிடாய்கள் வெட்டி அன்னதானம்

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டி மகா கருப்புச்சாமி கோயிலில் 20 கிடாய்கள் வெட்டப்பட்டு நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செடிப்பட்டி மகா கருப்புச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கிடாய் வெட்டி அன்னதான விழா நடைபெறும். இதையொட்டி இந்த ஆண்டு கருப்புச்சாமிக்கு அன்னதான விழா நடத்த செடிப்பட்டி கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று மகா கருப்புச்சாமிக்கு நள்ளிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிராம மக்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 20 கிடாய்கள் வெட்டப்பட்டு சாமிக்கு பலியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டு அன்னதான விழா நடந்தது. இந்த அன்னதான விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !