வடபழநி ஆண்டவர் கோவிலில் பிரமாண்ட சக்தி கொலு; பக்தர்கள் வியப்பு
ADDED :759 days ago
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. சென்னை மாநகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழநி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டிற்கான விழா, சக்தி கொலு எனும் பெயரில் துவங்கியது. நவராத்திரி முதல் நாளான இன்று கொலுவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கண்கவர் அலங்காரத்தில் சுவாமிகளும், அம்பாளும் கொலு சன்னதியில் காட்சியளிப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுளர்களின் உருவங்களுடன் அமைக்கப்பட்ட கொலுவை பக்தர்கள் வியப்புடன் கண்டு தரிசனம் செய்தனர்.