/
கோயில்கள் செய்திகள் / பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி; அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்
பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி; அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்
ADDED :758 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நவராத்திரி விழா முதல் நாளில் கல்யாண மண்டபத்தில் பார்வதி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவின் முதல் நாளில் பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நவராத்திரி 2ம் நாளான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.