நடன கோபால நாயகி சுவாமிக்கு பாவாடை நைவேத்தியம்
ADDED :757 days ago
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் நடன கோபால நாயகி சுவாமிக்கு பாவாடை நைவேத்தியம் நடத்தப்பட்டது.
ஆண்டாள் பெருமாளை ஸ்ரீரங்கத்தில் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் நாயகி சுவாமிகள் தன்னை ஒரு பெண்ணாக பாவித்து பெருமாளிடம் அடைய விரும்பி முக்தி அடைந்தார். இவருக்கு பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தனி சன்னதி அமைத்து வழிபாடுகள் நடக்கிறது. இந்நிலையில் நாயகி சுவாமிகள் சன்னதியில் புளியோதரை, தயிர் சாதம், தேங்காய் சாதம், வடை, முறுக்கு, பழங்கள் என நெய்வேத்தியம் சமைத்து, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சிறப்பு தீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு அனைத்தும் பிரசாதங்களாக வழங்கப்பட்டது.