உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரக்நாத் கோவிலில் யோகி ஆதித்யநாத் கலசம் வைத்து ஜகத்ஜனனியை வழிபட்டார்

கோரக்நாத் கோவிலில் யோகி ஆதித்யநாத் கலசம் வைத்து ஜகத்ஜனனியை வழிபட்டார்

கோரக்பூர்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கலசம் வைத்து துர்கா பூஜை செய்து வழிபாடு செய்தார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோரக்பூரில் கோரக்நாத் கோவில் வந்து யோகி ஆதித்யநாத், கோவில் முதல் தளத்தில் அமைந்துள்ள சக்திபீடத்தில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை நிறுவி வழிபட்டனர். தொடர்ந்து ஜகத்ஜனனி வழிபாடு, தேவி பாராயணம், ஆரத்தி பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வருணனை ஆராதித்து, சக்திபீடத்தின் கருவறையில் யோகி ஆதித்யநாத் கலசத்தை நிறுவினார். முதலில் துர்க்கை, சிவன் மற்றும் குரு கோரக்நாத்தின் ஆயுதமான திரிசூலத்தை பிரதிஷ்டை செய்து கௌரி விநாயகரை வழிபட்டார். உலக நலன், அமைதி மற்றும் நாட்டு மக்களின் செழிப்புக்காக துர்கா மாவிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து துர்கா கோயிலின் (சக்தி பீடம்) கருவறையில் ஸ்ரீ மத்தேவி பகவத் பாராயணம் மற்றும் ஸ்ரீ துர்கா சப்தசதி பாராயணம் தொடங்கியது. விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !