/
கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் களைகட்டிய நவராத்திரி பிரம்மோற்சவம்; சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசுவாமி
திருப்பதியில் களைகட்டிய நவராத்திரி பிரம்மோற்சவம்; சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசுவாமி
ADDED :757 days ago
திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி சின்ன சேஷவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று பெரிய சேஷ வாக புறப்பாடுடன் துவங்கியது.பெரிய சேஷ வாகனத்தில் சீதேவி பூதேவி சமேதரராய் மலையப்பசுவாமி நேற்று இரவு வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல் நாளான்று பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் தத்தம் மாநில கலாச்சார நடனங்களை நிகழ்த்தினார். சுவாமி வலம்வரும் மாடவீதிகளில் ஏாராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்ததுடன் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். விழாவினை முன்னிட்டு கோவிலின் மண்டபம் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தது.