லட்சுமி நரசிம்மர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1086 days ago
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் தாளக்கரை பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி கடைசி நாள் மற்றும் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவிலில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.