குற்றாலம் சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை
ADDED :758 days ago
குற்றாலம், குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய் - மொழி அம்பாள் கோவிலில் ஐப்பசி விசு திரு விழா, கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து 15ம்தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடந்தது. இந்நிலையில், நேற்று காலை சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு, பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடந்தது. நாளை (18ம்தேதி) விசு தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து திருவி லஞ்சி குமரனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.