உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் மதுரை மீனாட்சி தரிசனம்; பக்தர்கள் பரவசம்

வடபழநி ஆண்டவர் சக்தி கொலுவில் மதுரை மீனாட்சி தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சென்னை; சென்னை , வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, ‘சக்தி கொலு’எனும் பெயரில், கொ லு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் இரண்டாம் நாளான நேற்று காலை , மாலையில் சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொட ர்ந்து லலிதா சகஸ்ரநா பாராயணம்,வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலு பாட்டு நடந்தது. நேற்று மாலை நவரஸ நாட்டிய கலாலயம் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொட ர்ந்து, வீரமணிராஜுவின் இசைக்கச்சேரி நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !