உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவந்தியப்பர் கோயிலில் நடராஜர் வெள்ளை சாத்தி வீதியுலா

சிவந்தியப்பர் கோயிலில் நடராஜர் வெள்ளை சாத்தி வீதியுலா

விக்கிரமசிங்கபுரம்; விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சுவாமி நடராஜர் வெள்ளைசாத்தி வீதியுலா நடந்தது. விக்கிரமசிங்கபுரம் வழியடிமை கொண்டநாயகி சமேத சிவந்தியப்பர் கோயில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு 8ம் நாளான நேற்று காலை சுமார் 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, 9 மணிக்கு சுவாமி நடராஜர் வெள்ளை சாத்தி வீதி உலா, 11 மணிக்கு நடராஜர் அபிஷேகம் நடந்தது. மாலை சுமார் 4 மணிக்கு சுவாமி நடராஜருக்கு அலங்கார தீபாராதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் பச்சைசாத்தி வீதி உலா, இரவு சுமார் 9 மணிக்கு சுவாமி, அம்பாள்வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !