உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நலம் தரும் நவராத்திரி நாட்களில் என்ன செய்யக்கூடாதது?

நலம் தரும் நவராத்திரி நாட்களில் என்ன செய்யக்கூடாதது?

உலகத்தையே அச்சுறுத்தி வந்த அரக்கனை அழித்த பராசக்தியின் வெற்றியைக் கொண்டாடும் திருவிழா தான் நவராத்திரி; இது பெண்களுக்கான பண்டிகை;

* கொலு வைப்பவர்கள் காலை, மாலை என, இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

* எந்த நாள் எந்த எந்த உணவுகளை செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலே உள்ளது; அதற்கு ஏற்ப தவறாமல் விளக்கேற்றி கற்பூரம் காண்பிக்க வேண்டும்

* கொலு வைக்காதவர்களும் இதை பின்பற்றலாம்; அம்பாளின் திருவுருவப்படங்களையே பூஜை செய்து தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்

* எவ்வளவு தான் பூஜை புனஸ்காரம் செய்து ஒன்பது நாட்களுக்கான பூஜை விதிமுறைகளை சாசனத்தை பின்பற்றி வந்தாலும், வீடு அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது

* தினமும் சிறுமிகள் அல்லது பெண்களை வீட்டுக்கு வரவழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு தாம்பூலம் வைத்து கொடுத்து அவர்களின் ஆசி பெறலாம்

* ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமையன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவையோ அல்லது ரவிக்கை துணியோ வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

* தினமும் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் உணவை சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது

* நைவேத்யம் செய்யப்படும் உணவுகளில் பூண்டு வெங்காயம் மற்றும் எந்தவிதமான மசாலா பொருட்களையும் சேர்க்காமல் செய்வது நல்லது.

* இனிப்பு வகைகள் மற்றும் தினம் ஒரு சுண்டல் வகை என்று நைவேத்தியம் செய்யலாம்

* தினமும் காலை மற்றும் மாலை அம்பாளின் ஏதாவது ஒரு ஸ்தோத்திரத்தை கூறுவது நல்லது; மாலை பூஜை செய்பவர்கள், மதிய நேரத்தில் தூங்க கூடாது.

* வீட்டில் உள்ள அனைவருமே, நவராத்திரி முடியும் வரை, அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !