உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா; ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா; ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொ ண்டாடப்படும், நவராத்திரி விழாவுக்கான இந்தாண்டு கொடியேற்றம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக, அம்மன் சன்னிதி வளாகத்தில், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, கலசம் நிர்மாணிக்கப்பட்டு, பூஜை நடந்தது. பின், கொடி மரம் முன், விநாயகர் மற்றும் தபசு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ தாயாரை கொலுவிருக்க செய்தனர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர் மற்றும் கலச நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்களின், ‘ஓம் சக்தி... பராசக்தி’ முழக்கங்களுடன், கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் உற்சவ தாயார், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமாமகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, சரஸ்வதி, மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருவார். 24ல் விழா நிறைவடைகிறது. நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி
கமிஷனர் சுப்பிரமணியம் மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். தேரடி அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில், திருவொற்றியூர் பொன்னியம்மன் கோவிலிலும், நவராத்திரி விழா நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !