உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதஸ் அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி அம்மன்; பக்தர்கள் தரிசனம்

சதஸ் அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி அம்மன்; பக்தர்கள் தரிசனம்

தஞ்சை ; தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி 3ம் நாள் விழாவினை முன்னிட்டு பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம்  செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், வனதீபம் குழுவினரின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது, தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு படை திரட்டல் அலங்காரமும், எல்லையம்மன் கோயிலில் அம்மனுக்கு சதஸ் அலங்காரம் மற்றும் கொங்கணேஸ்வரர் கோயிலில் துர்காம்பிகைக்கு தபஸ் அலங்காரமும், அங்காளம்மன் கோவியில் ஊஞ்சல் சேவையில் சொர்ண அலங்காரமும், ஸ்ரீசியாமளா தேவி அம்மன் கோயிலில் அன்னபூரணி அலங்காரமும்  செய்யப்பட்டது. ஏராளமானோர் கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்து ,சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !