உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பஞ்ச சகஸ்ர விநாயகர் பூஜை

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பஞ்ச சகஸ்ர விநாயகர் பூஜை

கூடலுார்: கூடலுார் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 பஞ்ச சகஸ்ர விநாயகர் பூஜை நடந்தது. கூடலுார் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 1008 பஞ்ச சகஸ்ர விநாயகர் பூஜை நடந்தது. மாட்டுச் சாணம் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமாவளி பூஜை நடந்தது. பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். இதற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !