திருப்புவனத்தில் சைவ சமய வகுப்புகள் தொடக்கம்
ADDED :761 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சைவ சமய வகுப்புகள் தொடக்க விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீவேலப்பர் தேசிகர் திருக்கூட்டத்தினர் சார்பில் சைவ சமய அடிப்படை சிந்தனை, திருமுறைகள், சைவ சித்தாந்தம், புராண வகுப்புகள் வாரம்தோறும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் மாலை ஐந்தரை மணி முதல் இரவு ஏழரை மணி வரை சிவத்திரு முத்துமாணிக்கம் ஆசிரியரால் கற்பிக்கப்படுகிறது. திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் பக்தி சொற்பொழிவுடன் வகுப்புகள் தொடங்கின. இலவசமாக கற்றுத்தரப்படும் இவ்வகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கு ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.