வடபழநி ஆண்டவர் கோவிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :1031 days ago
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் இன்று அம்பாள் சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும், மாலை சொற்பொழிவும், அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.