உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரியில் பரிவேட்டை; பாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்

கன்னியாகுமரியில் பரிவேட்டை; பாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10ம் நாளான நேற்று அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடந்தது. போலீஸ் அணிவகுப்புடன் நடந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் கன்னியாகுமரி பக வதி அம்மன் கோவி லில் நவராத்திரி திரு விழா கடந்த 15ம் தேதி முதல் துவங்கி நடந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான பரி வேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வெளி பிரகாரத்தில் அலங்கார மண்டபத் தில் எலுமிச்சை பழம் மாலைகளால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிற்பகல் 1:30 மணிக்கு அம்மனின் பரிவேட்டை ஊர்வ லம் துவங்கியது. ஊர் வலத்தின் முன் நெற்றி பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை சென்றது. அதைத்தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சென்றனர். வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணி வகுப்பு அளித்தனர். மரியாதை பரிவேட்டை கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மனின் பரிவேட்டைஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந் திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு,பரமார்த்தலிங் கபுரம், நான்கு வழிச் சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக இரவு 7:30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு பகவதி அம்மன் பாணா சுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்த பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபார தனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு அம் மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்க புரம் பகுதிக்கு சென் றது. வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சை பழம்மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். ஆராட்டு பின்னர் காரியக்கார மடத்துக்கு அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. இரவு முக்கடல் சங்கமத்தில் அம்மன் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்தார். போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் இணைந்து செய்திருந்தது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !